சனி, 28 ஆகஸ்ட், 2010

மக்கள் மருத்துவன்

மனம் நிறைந்தாய் மருத்துவனே.!

செந்தமிழின் தாயகமாம் யாழ்ப்பாணத்தில்
சேர்ந்த புகழ் சித்தவைத்தியத்தின் தொன்மைபேணி
வந்தவர்கள் போற்றும் வகை நல்ல கல்வி தந்து
உயர் கலைக் கோவில் ஆகும்
சித்த வைத்திய கல்லூரி வாழ்க வளர்;ந்திடுக
இந்த வகை புகழ் விளங்க துணையாய் நின்ற
செந்தமிழ்நூல் மக்கள் மருத்துவனே நின் புகழும்
நின்னை தந்த பேரறிஞ்ஞர் புகளும் நீடு வாழ்க.

மண்ணில் மக்கள் நல்லவண்ணம் வாழவேண்டி
வகையறிந்த பல அறிஞ்ஞர் ஒன்று கூடி
எண்ணினார் இயற்றினார் மக்கள் மருத்துவனாம்
வண்ணமலர் செய்தார் மக்கள்
திண்ணியராய் வாழும் செய்தியெலாம்
சொன்னதய்யா மருத்துவநூல் சிறந்துவாழ்க
கணணின் மணி எம் கல்லூரி குரலாய்யென்றும்
ஒலித்திடுக காலமெல்லாம் நிலைத்து வாழ்க.

நல்லரியமூலிகையின் குணங்கள் கண்டு
நன்மைமிகு மருத்துவமுறைகள் தந்தார்
சொல்லரிய சேதி எல்லாம் தந்து
மக்கள் நோய் தீர்க்கும் வழியும் செய்தார்
பல்லறிஞர் வியக்கும் வகை மருத்துவன் தான்
மக்கள் மனம் நிறைந்ததையா
எல்லோரும் போற்றுமிந்த புகழ் நூலை
தந்திடுவோர் தரணியில் சிறந்து வாழ்க

விஞ்ஞானம் வளர்ந்து பல புதுமை கண்டும்
மரபணுவில் கூட சிலர் மாற்றம் செய்தும்
எஞ்ஞான்றும் இளமையடன் இருக்கும்
சுதேசமருத்தவத்தின் புகழ் நூலே
யாழ்பாணத்தின் நல் வைத்தியர்கள்
கைளிலே வளர்ந்தாய்; வாழி.
மருத்துவனே நோய் தீர்க்கும் மருந்து தந்தாய்
மக்கள் மனங்களிலே நிறைந்தாய் வாழி.


நல்ல அரும் மருந்துகளின்
குணங்கள் கண்டு நோய்
வெல்ல பல முறைகள் சொன்னாய்
மக்கள் மருத்துவனே நின்னை காண
எல்லொரும் ஆசை கொண் டோம்
மாணவரின் முயற்ச்சியினால்
பல்லோரும் போற்றும் வகை.
வந்தாய் வாழி! வாழி!
ந.மணிகரன்
3ம் வருட மருத்துவ மாணவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக